Sunday, December 20, 2009


தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலகில் எந்த சினிமாவாக இருந்தாலும் புதிதாய் ஏதும் கதை பண்ண முடியாது. ஆனால் அதை சொல்லும் முறையிலான திரைக்கதையினால் பழைய கதையையே புதிதாய் காட்டமுடியும். திரைக்கதையினால்தான் நாம் திரைப்படங்களில் சொல்லும் பல நம்ப முடியாத விஷயங்களையும் நமக்கு தெரிந்தே திரையில் வரும் நாயகனால் முடியும் என்று நம்ப வைப்பது திரைக்கதையின் வெற்றி. உதாரணத்துக்கு பாஷா திரைப்படத்தில் படத்தின் ப்ளாஷ்பேக்கில் ரஜினியின் தற்போதைய கெட்டப்பை விட வயதான கெட்டப்பில் தான் காட்டப்படுவார். ஆனால் பளாஷ்பேக் முடிந்ததும் இளமையான ரஜினி படம் முழுவதும் வருவார். இந்த லாஜிக் மீறல்களை உணர முடியாத அளவிற்கு திரைக்கதை தீப்பிடித்தார் போல ஓடும் அதனால்தான் இன்றளவும் பாஷா மிகச் சிறந்த ஒரு படமாய் ரஜினிக்கு அமைந்தது. அதே போல் இந்தியன் தாத்தா கேரக்டர் சும்மா சர்வ சாதாரணமாய் ஆட்களை வர்மக் கலை மூலம் பிரட்டி போட்டுவிட்டு சண்டை போடுவார், ஓடுவார், கொலை செய்வார். ஆனால் ஒரு என்பது வயது பெரியவரால் அதை செய்ய முடியும் என்பதை கமலின் நடிப்பின் மூலமாகவும், அதற்கான திரைக்கதையின் மூலமாகவும் நம்மை நம்ப வைத்திருப்பார் இயக்குனர்.

சரி வேட்டைக்காரன் படத்திற்கும் மேலே சொன்ன விஷயத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா..? நிச்சயம் இருக்கிறது. விஜய் என்ற ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் கால்ஷீட் கிடைத்துவிட்டது. பெரிய தயாரிப்பாளர். திரும்ப, திரும்ப வெறுத்து போகும் அளவிற்கு விளம்பரம் செய்து பரபரப்பை ஏறபடுத்தும் விநியோகஸ்தர் கிடைத்தாகிவிட்டது. இவ்வளவு நல்ல விஷயஙக்ள் எல்லாம் கிடைத்தும் ஒரு மொக்கை கதையை மீண்டும் நமக்கு அலுக்கும் திரைக்கதையில் சொல்லி ஒரு படம் பார்த்துவிட்டு வந்தால் பதினைந்து படத்தை ஒரு சேர பார்த்த அலுப்பை ஏற்படுத்தும் வேட்டைக்காரனை தந்திருக்கும் இந்த குழுவை என்னவென்று சொல்வது? விஜய் படமென்றால் இப்படிதான் இருக்கும் இதில் என்ன எதிர்பார்த்து போகிறீர்கள்? உலக சினிமாவையா? அல்லது லாஜிக்கான திரைக்கதையையா..? என்று கேட்பீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விஜயின் எவர்கீரின் ஹிட்டுகளான கில்லியாகட்டும், போக்கிரியாகட்டும் ஒரு மாஸ் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களையும், லாஜிக் மீறல்களையும் தாண்டி ஒரு அருமையான பரபரப்பான பார்வையாளர்களை கட்டி போட்டு உட்கார வைக்கும் திரைக்கதை இருந்தது என்பதை நிச்சய்ம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
+2
நான்கு வருடம் ஃபைல் ஆன ஒரு விஜய்க்கு ரோல் மாடல் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஸ்ரீஹரி, அவரை போல .பி.எஸ்ஸாகி ஒரு போலீஸ் ஆக வேண்டும் என்று போராடி படித்துக் கொண்டிருக்கும் விஜய், ஒரு சுபயோக சுபதினத்தில் பாஸாகி ஏஸி ஸ்ரீஹரி படித்த காலேஜிலேயே போய் ஜாய்ன் செய்கிறார். சந்தர்ப்ப வசத்தால் தன் நண்பி ஒருவருக்காக ஊரில் யாருமே எதிர்க்க பயப்படும் சாய் குமாரிடம் நேருக்கு நேராய் மோதி பகையை வாங்கிக் கொள்ள, விஜய்யை என்கவுண்டரில் போட்டு தள்ள போலீஸும் அலைய, பவர் இல்லாமல் தனியனாய் இருக்கும் ஸ்ரீஹரி விஜயை அதிலிருந்து காப்பாற்றி உதவுகிறார். விஜய்யை வில்லன் கோஷ்டியினர் என்ன செய்தார்கள்? எப்படி அதிலிருந்து விஜய் தப்பித்தார் என்பதை மன திடமுள்ளவர்கள் தியேட்டரில் சென்று பார்ப்பார்களாக..

போலீஸ் ர்வியாக விஜய, பெரிதாய் ஏதும் செய்யவில்லை அவர் இந்த படத்தில் வழக்கம் போல ஆடுகிறார், பாடுகிறார், காமெடியாய் நடிக்கிறேன் பேர்விழி என்று முகத்தை ஒரு மாதிரி வைத்து கண்களை சிமிட்டி, காமெடி செய்கிறார். எடிட்டர், ஒளிப்பதிவாளர் உதவியால் பரபாப்பான சண்டை காட்சியில் பங்கு கொள்கிறார். அவ்வப்போது சாமி.. சாக்கடை என்று பஞ்ச் டயலாக் அடிக்கிறார் வேறொன்றும் பெரிதாய் சொல்வதற்கு இல்லை.
அனுஷ்க்காகாகா.. எனக்கிருந்த ஒரே ஆர்வம் இவர்தான. ஆனால் படத்தில் இவருக்கும் விஜய்க்கும் பெரிதாய் ஏதும் கெமிஸ்டிரியோ, பிஸிக்ஸ்சோ வரவில்லை. அனுஷ்காவுடன் பார்க்கும்போது தமிபியாய் தெரிகிறார். வழக்கமான பெரிய பட்ஜெட் ஹீரோயினுக்கான எல்லா விஷயங்களையும் செய்திருக்கிறார். ஆனால் அவரின் ஓவர் மேக்கப் இன்னும் கெடுத்து விடுகிறது. இம்மாதிரியான ஸ்கிரிப்ட்களீல் வழக்கமாய் பார்த்த இரண்டாவது நிமிடம் காத்ல் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்.

காமெடி என்கிற பெயரில், ஸ்ரீநாத், சத்யன், ஷாயாஜி ஷிண்டே, சுகுமாரி என்று ஒரே அறுவை பட்டாளம். முடியலைடா சாமி.

படத்தில் ஒரளவேணும் பாராட்ட பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் கோபிநாத். விஜய் ஆண்டணியின் பாடல்கள் எல்லாம் கேட்கும் போது ஹிட் ரகமாய் இருந்தாலும் படத்தில் ராங் பிளேஸ்மெண்ட். முதல் நான்கு வரிகளில் இருக்கும் பெப் அடுத்தடுத்த வரிகளில் சுருதி இறங்கி விடுகிறது.

சமீப காலத்தில் இவ்வளவு மொக்கை வில்லனை பார்க்கவில்லை. அவ்வப்போது காரில் வந்திருந்து ஹைஸ்பீடில் நிற்பதும் நுணலும் தன் வாயால் கெடும் அல்ப சப்பையாக சலிம் கவுஸ். நாலு சீனுக்கு ஒரு முறை ஒரு மாசத்தில அவன் எங்கயோ போயிட்டான், மூணு மாசத்தில பெரிய ஆள் ஆயிட்டான் என்று சொல்லிக் கொண்டிருப்பதை தவிர, வேறொன்றும் பெரிதாய் செயய்வில்லை.

இவரின் மகனாய் சாய்குமார், இவரின் ஹேர்ஸ்டைலும் பாடிலேங்குவேஜும் ஓகே. ஆனால் ஒரு ரூபாய்க்கு பத்து ரூபாய் அளவுக்கு மெனக்கெடுகிர்றார். படம் முழுக்க இவர் ஏதோ வெறி பிடிதார் போல கத்துகிறார்.

அவ்வளவு பெரிய கோடீஸ்வர வில்லன் படு மொக்கையாய் சாராயம் கடத்துவதும், சிட்பண்ட் கம்பெனி நடத்துவதும், போன்ற ஏப்ப சாப்பை வேலைகளாய்தான் செய்கிறாரே தவிர புதிதாய் ஏது யோசிக்க முடியவில்லையா இயக்குனரே. ? ஒருவன் சாதாரணமாய் தன் சாம்ராஜ்யத்தையே காலி செய்பவனை பற்றி முன்று மாசத்தில் பெரிய ஆளாயிட்டான் ,ஆறுமாசத்தில பெரியாளாயிட்டான் என்று கமெண்டரியையா கொடுத்து கொண்டிருப்பான். பரபரவென ஓடிக் கொண்டிருந்தால் அது பரபரப்பான திரைக்கதை என்று நினைத்துவிட்டரோ.? பழைய தெலுங்கு படங்களில்தான் ஒரு ஃபைட் முடிந்தவுடன் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் மாறியே பலகாலம் ஆகிவிட்டது அதை இன்னுமா விடவில்லை நீங்கள்..? வழக்கமாய் என்னதான் ரவுடியானாலும், ஏழைப்பங்காளனாகவும், வில்லனை பழிவாஙக் அவனது சொத்துகளை அழிப்பதும், லாலிபாப் குழந்தை கூட அடுத்த காட்சி என்னவென்று சொல்லிவிடும்.

நல்லா ஒரு விஷயமும் இல்லையா என்றால் ஆங்காங்கே பாடல்களில் விஜ்யின் நடனமும், சின்ன சின்ன ரியாக்‌ஷன்களும், விஜய்க்கும் அனுஷ்காவுக்கும் பெரியதாய் ஜோடி சேரவில்லை என்றாலும் சில இடங்களில் பாடல்களில் அனுஷ்கா நச். அதே போல் என்னடா எல்லா விஷயத்திலும் மொக்கையாகிவிட்டானே வில்லன் என்ன செய்ய போகிறான் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது அமைச்சராகப் ஆயத்தமாகும் காட்சி.. அடநல்ல மூவாக இருக்கிறதே என்று லேசாய் புருவம் உயர்த்த வைக்கும் கட்சிகள்

வேட்டைக்காரன்எலி வேட்டை

No comments: