Tuesday, May 11, 2010ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...


அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!


விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!


'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!


கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.D கூட விட்டதில்ல!


அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!


பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!


அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...


சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!


படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!


வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!


ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...


நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் -மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு...
தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.
.
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!

Anbuden,

Jegankumar.S.P

Friday, May 07, 2010

கமாக்கதைகள்(இடம் மாறிய கால்)கணிணிதிரையை வெறித்து பார்த்து கொண்டிருந்த சஞ்சயையின் கவனத்தை அலைபேசியின் ”நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம்” என்ற ரிங்டோன் கலைத்தது, திரையில் தெரிந்தது புதுஎண்ணாக இருந்தாலும் பிஸ்னஸ் காலாக இருக்கலாம் என பொத்தானை அழுத்தி காதில் வைத்தான், ஹலோ என்ற புல்லா”குரல்” காதில் பாய்ந்தது, சில நொடிகள் சுதாரிப்புக்கு பின்னே தான் அவனால் பதில் ஹலோ சொல்ல முடிந்தது, மறுமுனையில் தயங்கிய குரல் ”ஸாரி, ராங்நம்பர்” என்று போனை துண்டித்தது!


பிஸ்னஸ்மேன் சஞ்சயை யாரும் அவ்வளவு சுலபமாக டிஸ்டர்ப் பண்ணமுடியாது, ஆனால் இந்த குரலில் ஏகத்துக்கும் டிஸ்டர்ப் ஆனான், யோசனையில் இருந்தவன் சட்டென்று அந்த நம்பருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினான்! "thank you for calling me, i hope you enjoy with this conversation"(copyrighted by வால்) என்று, எதிர்பார்த்த மாதிரியே சில நிமிடங்களில் அதே நம்பரில் இருந்து அழைப்பு வந்தது, மீண்டும் அதே புல்லாங்”குரல்”, ”என்ன மெசேஜ் அது” ஸாரிங்க, அது டிஃபால்ட் மெசேஜ், யார் எங்கிட்ட பேசினாலும் அந்த நம்பருக்கு போயிரும், எனிவே உங்களுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, உங்ககிட்ட பேசினதுல எனக்கு ரொம்ப சந்தோசம் என்றான் சஞ்சய்! ஏன் என்றாள், உங்கள் குரலை சோறு தண்ணி இல்லாம கேட்க சொன்னாலும் கேட்பேன் என்றான்! பொய் சொல்லாதிங்க என்றது மறுமுனை! உங்க குரல் பொய்யினா இந்த உலகமே பொய், நான் சூடம் அணைச்சு சத்தியம் பண்ண தயார் என்றுதும் மறுமுனையில் கேட்ட சிரிப்பு சத்தத்தில் நாமே சிதறிய முத்துக்களை தேட குனிவோம்!

என்னங்க இது இப்பதான் பேச ஆரம்பிச்ச மாதிரி இருக்கு அதுகுள்ள நாலு மாசம் ஓடிபோச்சு!

உங்ககிட்ட பேசுனா எனக்கு எனக்கு வருசம் கூட நிமிடம் தான்!

இப்படி பேசி பேசி தான், நல்லா இருந்த என்னை கெடுத்துபுட்டிங்க, மாசாமாசம் பில்லுக்கு புருசங்கிட்ட ஆயிரதெட்டு பொய் சொல்ல வேண்டியிருக்கு!

நான் பண்றேன்னேனு சொன்னாலும் வேண்டாங்கிற

வேணாங்க, அவரு எப்பவேணும்னாலும் வருவாரு, இப்பெல்லாம் போனை எடுத்து பாக்குறாரு, அதான் லேண்ட்லைன்ல இருந்து கூப்பிடுறேன், சரி திடிர்னு இந்த நம்பர்ல இருந்து யாராவது கூப்பிட்டு நீங்க யாருன்னு கேட்டா என்ன சொல்விங்க!

எனக்கு தெரியாது, நீயே சொல்லு என்ன சொல்றது!

அவ்வளவு அறிவு இருந்தா நான் ஏன் இங்க இருக்கேன்!

சரி நானே சொல்றேன், ஹோம் அப்ளையன்ஸ் கன்சல்டிங்னு சொல்வேன்!, நீ எங்கிட்ட என்ன பொருள் வாங்கலாம்னு ஐடியா கேட்டதா சொல்வேன்!, என்ன பொருள்னு கேட்டா, பர்டிகுலரா எதுவும் கேக்கல, எதாவது புதுசா வந்துருக்கான்னு கேட்டாங்கன்னு சொல்வேன்!

அதெப்படிங்க, கேட்டவுடனே ஒரு ஐடியா சொல்றிங்க!

அப்படியில்லாமலா சவுத் இண்டியா முழுதும் பிஸ்னஸ் பண்ணமுடியுது! ஒகேடா செல்லம், நான் கிளம்புறேன், நாளைக்கு போன் பண்ணு!


வீட்டின் முன் பைக்கை நிறுத்தி அதீத மகிழ்ச்சியின் துள்ளலுடன் ஓட்டமும் நடையுமாக சென்று கதவை திறந்தான், நொடிபொழுதில் போனின் ரீசிவரை டக்கென்று அவனது மனைவி வைத்தது அவன் கண்ணில் இருந்து மறையவில்லை! அவளும் வைத்த வேகத்தில் இவனை பார்க்காமலே உள்ளே சென்றாள், ஒருவித குற்ற உணர்வுடன் தலையை குனிந்து கொண்டே சென்றது சஞ்சய்க்கு கொஞ்சம் நெருடியது! உள்ளே சென்று விட்டாளா என எட்டி பார்த்து போனை கையிலெடுத்து ரீடெயில் பட்டனை தட்டினான்!

ஹலோ, யார் நீங்க!

(சில நொடி மெளனத்திற்கு பின்) இது லெண்டிங் லைப்ரேரிங்க!

இப்போ இந்த நம்பர்லருந்து போன் வந்ததே!

ஆமாங்க, நாவல் படிக்க வாடகைக்கு கொடுப்போம், படிச்சவுடன் போன் பண்ணி கேப்பாங்க, புதுசு கொடுத்துட்டு பழசை வாங்கிட்டு போவோம்.

இப்போ என்ன கேட்டாங்க

பர்டிகுலரா எதுவும் கேக்கல, எதாவது புதுசா வந்துருக்கான்னு கேட்டாங்க

சஞ்சய்க்கு முதுகுதண்டில் மின்னல் வெட்டியது!

Thanks to http://valpaiyan.blogspot.com/