உன்
நேசங்களுக்கான
என் காத்திருப்புகளை
சுடும் பாலை மணலில்
இரைக்காக
ஒளிந்து கிடக்கும் விஷப்பாம்பின்
காத்திருப்புகளாகக் கருதாதே..
அது
துளி மழைக்காக
காத்திருக்கும்
பாறையிடுக்குத் தேரையின்
காத்திருப்பையொத்தது..
என்றாலும்
உன் கருத்தியலை உண்மையென்றும்
என் வார்த்தைகளை பொய்யென்றும்
கொள்ள
உரிமையுண்டு உனக்கு.
Saturday, March 06, 2010
நீ விலகி சென்ற பின்பான நாட்களில்
வலிகளால் மட்டுமேயான உலகமொன்று
என்னை விழுங்கிக்கொண்டது
மரண ஓலங்களும் இரத்தத்தின் பிசுபிசுப்புகளும்
தலைக்குள் ஓயாது தொடர ஓடிக்கொண்டேயிருந்தேன்
உன் உருவங்கள்
சிரித்தபடி கொஞ்சியபடி முறைத்தபடி அழுதபடி
எப்போதுமாய் எதிர்ப்பட்டுக் கொண்டேயிருந்தன
உன் உருவங்கள் கடந்த ஒவ்வொருமுறையும்
நான் உடலெங்கும் கூர்நகங்களால் கீறிக்கொண்டேன்
தனிமைகள் தகிக்கும் வெப்பங்களை உமிழ்ந்தன
நான் மாறி மாறி
தற்கொலை செய்துகொண்டேயிருந்தேன்
உன் நினைவுகள் விலகுவதாயில்லை
நான் உன் உருவங்களைக் கொலைசெய்ய துணிந்தேன்
உன் வெவ்வேறு நிற உருவங்களுக்கு மத்தியில்
நீ சிரித்துக்கொண்டேயிருந்தாய்..

Thursday, March 04, 2010
Wednesday, March 03, 2010
Saturday, February 27, 2010
Subscribe to:
Posts (Atom)