எல்லா மழையும்
நாம் ஒன்றாய் நடந்ததை
எனக்கு நினைவுபடுத்தும்..
எந்த மழையாவது உனக்கு
என்னை நினைவுபடுத்திருக்கிறதா??
எல்லா பூக்களும்
உனக்கு நான் கொடுத்த பூக்களை
நினைவுபடுத்தும்..
எந்த பூவாவது
உனக்கு நான் தயங்கி தயங்கி கொடுத்த
அந்த முதல் பூவையாவது
நினைவுபடுத்திருக்கிறதா??
எல்லா கடலலைகளும்
நம் பாதச்சுவடுகளை
எனக்கு நினைவுபடுத்தும்..
என்றைக்காவது நீ
எந்த கடலலை
நம் பாதச்சுவடுகளை பத்திரமாய் வைத்திருக்கும்
என்று யோசித்திருக்கிறாயா??
கடந்து செல்லும் எல்லா பெண்களும்
உன்னையே நினைவுபடுத்துவர்..
எந்த ஆணிலாவது
என்னை நீ கண்டிருக்கிறாயா??
உனக்கு பிடித்த பாடல்களெல்லாம்
உன்னை
எனக்கு நினைவுபடுத்தும்..
அப்பாடல்களை நீ மீண்டும் கேட்குகையில்
"இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா"
என்று என்னிடம் சொன்னது
உன் நினைவுக்கு வருமா??
'
எல்லா செல்பேசி அழைப்புகளும்
குறுந்தகவல்களும்
உன்னிடமிருந்து வந்திருக்குமோ
என்றே எதிர்பார்ப்பேன்..
ஒருவேளை நான்
உன் செல்பேசியில் அழைத்தால்
நீ குறைந்தபட்ச "ஹலோ" சொல்வாயா??
திரும்ப திரும்ப
உன்னை பற்றி மட்டுமே
நான் கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்..
இப்போதெல்லாம் நீ கவிதைப் படிக்கிறாயா??
இவ்வாறாக புலம்பிக்கொண்டு
நான் சிதைந்தபடிஇருக்கிறேன்
உன் நினைவுகளோடு...
நீ எப்படி இருக்கிறாய்
உன் புது வாழ்க்கையோடு???
1 comment:
Nice one Jegan..!
Post a Comment